நாவற்குழியில் இராணுவச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

யாழ்., நாவற்குழியில் இராணுவச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று அதிகாலை நாவற்குழி தெற்கு கெமுனு வோச் படைப்பிரிவு படை முகாமில் கடமையில் இருந்த இராணுவச் சிப்பாயே இவ்வாறு தற்கொலை புரிந்துள்ளார்.

குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து கடந்த 10 மாதங்களே ஆகியுள்ள நிலையில் வீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாகவே தற்கொலை செய்துகொண்டுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவப் பொலிஸாரும் சாவகச்சேரி பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண விசாரணையின் பின்னர் உயிரிழந்த சிப்பாயின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என இராணுவத் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.