இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று திடீரென விலகல்.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நேற்று திடீரென விலகினார்.

விரல் காயத்தில் இருந்து மீளவும், மனரீதியாக புத்துணர்ச்சி பெறவும் அவர் எல்லாவகையான கிரிக்கெட்டில் இருந்தும் கொஞ்ச காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார்.

அவருக்கு பதிலாக கிரேக் ஓவர்டான் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.