இலங்கை – ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

ஆறு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மொஸ்கோவ் நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்துள்ளது.

யு.எல் 534 ரக விமானமே இன்று காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக நிலைய தெரிவிக்கப்படுகிறது.

இதில் 51 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவரும் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவைக்காக 297 ஆசனங்களை கொண்ட ஏ 330 – 300 ரக எயார் பஸ் விமானங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மேலும் இதற்கமைய, வாரந்தோறும் இரவு 10.20 மணிக்கு ரஷ்யாவின் மொஸ்கோவ் நகரில் இருந்து புறப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு நாட்டை வந்தடையவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.