அஸ்ட்ரா சேனிகா கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்.

மேல் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இன்று முதல் அஸ்ட்ரா சேனிகா கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவு (DOSE) வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி , கொழும்பு − விஹாரமஹாதேவி பூங்காவில் இன்று காலை 8:30 மணி முதல் 24 மணிநேரமும் தடுப்பூசி வழங்கப்படும் என இராணுா தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை, இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

24 மணிநேரமும் தடுப்பூசி வழங்கும் நிலையம் அமைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மேலும் ,விஹாரமஹாதேவி பூங்கா மாத்திரமன்றி, மேல் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் அஸ்ட்ரா சேனிகா தடுப்பூசியின் இரண்டாவது மருந்தளவு (DOSE) வழங்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.