இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி …

கொழும்பு மாவட்டத்தின் 5 இடங்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று காலை 8.30 மணி முதல் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி , கொழும்பு தேசிய வைத்தியசாலை, கலுபோவில போதனா வைத்தியசாலை, கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலை, அவிசாவளை மாவட்ட வைத்தியசாலை மற்றும் விஹாரமஹாதேவி பூங்கா ஆகிய இடங்களில் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.