டோக்கியோ ஒலிம்பிக் கொரோனா சூழ்நிலைக்குள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அமெரிக்கா முதலிடம்.

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி கொரோனா சூழ்நிலைக்குள் வெற்றிகரமாக இடம்பெற்று இன்றுடன் (08) நிறைவடைந்தது.

போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பதக்க பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது.

#அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்கள் பெற்றுள்ளது.
#சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது.
#ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை கைப்பற்றியது.

#இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 48வது இடத்தை பிடித்தது.
போட்டிகள் அனைத்தும் முடிந்ததும் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் வண்ண லேசர் காட்சிகள், வாண வேடிக்கைகள் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்துடன் நிறைவு விழா அணிவகுப்பும் நடைபெற்றது.
வாணவேடிக்கை விழாவின் முடிவில் இடம்பெற்றதுடன் அடுத்த ஒலிம்பிக் போட்டியை (2024ஆம் ஆண்டு நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

– Nirujan Selvanayagam

Leave A Reply

Your email address will not be published.