சடலங்கள் குவியும் இலங்கை மருத்துவமனைகளின் தற்போதைய நிலை – சேனல் நியூஸ் ஆசியா

கோவிட் தொற்றுநோய் பரவுவதால், மருத்துவமனைகளில் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, கொழும்பு மாநகர சபை ஞாயிற்றுக்கிழமை மாலை 15 உடல்களை கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்தது. 

இதற்கிடையில், கொழும்பு தேசிய மருத்துவமனை, இனி உடல்களை சேமித்து வைக்க இடம் இல்லை எனத் தெரிவித்தது.

கோவிட் -19 காரணமாக இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைகளில் குவிக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்தது. வார இறுதி முழுவதும் மின் தகனங்கள் சுறுசுறுப்பாக இருந்தபோதிலும், உடல்கள் குவிக்கப்பட்ட விகிதத்தின் படி உடல்களை தகனம் செய்வது நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

“இதே வேகத்தில் நாங்கள் புதிய மின் தகனங்களை உருவாக்க வேண்டும்” என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சுமார் 20 உடல்கள் பிரேத வசதிகள் இல்லாமல் வைக்கப்பட்டு இருந்தன, அதே நேரத்தில் பாணந்துறை மருத்துவமனையில் சுமார் 50 உடல்கள் இருந்தன.

மருத்துவமனை வட்டாரங்களின்படி, கொழும்பு தேசிய மருத்துவமனையில் குளிர் வசதிகளுடன் கூடிய 66 சவ அறைகளும்  நிரம்பியுள்ளன.

கொரோனா ஆரம்பித்த காலத்தில் , ​​கோவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்களை அரசு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசே தகனம் செய்தது.

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் போததே கோவிட் நோயாளிகள் இறப்பதை காண முடிந்தது.

கோவிட் -19 ஆல் இறந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்காக ஆகஸ்ட் 9 ஆம் தேதி இலங்கையில் வெகுஜன தகனத்தை அரசு மீண்டும் தொடங்கியது.

மத எதிர்ப்புகள் காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் 15 முஸ்லீம்கள் மற்றும் 20 நாள் குழந்தையை தகனம் செய்த சர்ச்சையை அடுத்து இலங்கை அரசு உடல்களை எரிப்பதை நிறுத்தியது.

ஆனால் உள்ளூர் மற்றும் சர்வதேச எதிர்ப்பின் காரணமாக, முஸ்லீம்கள் முஸ்லீம் பாரம்பரியங்களுக்கு ஏற்ப கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் புதைக்க அனுமதிக்கப்பட்டனர்.

– அமலி ஜெயவீர

Leave A Reply

Your email address will not be published.