வாள்வெட்டுச் சந்தேகநபர் கைது! – கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் மீட்பு

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை தெல்லிப்பளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்., அளவெட்டி, நாகினாவத்தைப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவரே கைதுசெய்யப்பட்டு்ள்ளார்.

குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும் சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட இலக்கத் தகடற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.