14 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய , சகோதரன் கைது!

வவுனியா ஓமந்தை நவாவி பகுதியில் , 14 வயது சகோதரியை கர்ப்பமாக்கியதற்காக அவரது 12 வயது சகோதரனை ஓமந்தை பொலிஸார் நேற்று (09) கைது செய்துள்ளனர்.

சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் வவுனியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்த வேளை , அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

மருத்துவர்கள் , மருத்துவமனை போலீசில் புகார் அளித்த பின், போலீசார் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அவரது சகோதரர் பல நேரங்களில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறியுள்ளார்.

ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுவன் , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்தோடு , மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காக சிறுமி வவுனியா பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார்.

– திவயின

Leave A Reply

Your email address will not be published.