இலங்கையில் 18,000 சாவுகள் ஏற்படலாம் .. உடனே நாட்டை மூடுங்கள் என எச்சரிக்கிறது WHO

இலங்கையில் தற்போதைய இறப்பு மற்றும் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சுமார் 18,000 பேர் கோவிட் நோயால் இறக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகம் சிறப்பு மருத்துவர்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை நேற்று (12 ம் தேதி) சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையிலிருந்து இலங்கையர்களைப் பாதுகாக்க பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல், மாகாணப் பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக மாவட்டப் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், குறுகிய காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு விதித்தல், அனைத்து பொது நிகழ்வுகளையும் மூன்று வாரங்களுக்குத் தடை செய்தல், பொதுக் கூட்டங்களைத் தடுப்பது, சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாத்தல், பயனுள்ள தகவல் தொடர்புத் திட்டங்கள், நோய்த்தொற்றுகள் , இறப்பு விபரங்களை மறைக்காது வெளியிடல் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  உடனடியாக தடுப்பூசியை கொடுப்பது என முக்கியமான பரிந்துரைகளை அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை உலக சுகாதார நிறுவனம் மற்றும் 30 இலங்கை மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு நாட்டின் நிலவரங்களை விவாதித்த பின்னர் தொகுக்கப்பட்டுள்ளது.

வைத்திய நிபுணத்துவம் பெற்ற பாலித அபேகோன், நிஹால் அபேசிங்க, ராஜீவ் டி சில்வா, லக்குமார பெர்னாண்டோ, பத்மா குணரத்ன மற்றும் ஆனந்த விஜேவிக்ரமா ஆகியோர் அடங்குவர். பேராசிரியர்கள் அசித டி சில்வா, ராஜீவ் டி சில்வா, சரோஜ் ஜெயசிங்க, இந்திகா கருணாதிலக, நீலிகா மாளவிகே, காமினி மெண்டிஸ், மாலிக் பீரிஸ் மற்றும் மஞ்சு வீரசிங்க ஆகியோரும் இந்த அறிக்கையைத் தயாரிப்பதில் இக்குழுவில் இணைந்துள்ளனர்.

– உதயஜீவ ஏக்கநாயக்க

Leave A Reply

Your email address will not be published.