தலிபான்களுக்கு விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை : தலிபான் ஊடகத் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன்

தலிபான்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லை- தலிபான் ஊடகத் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன்
தலிபான் கிளர்ச்சியாளர்களின் தோல்விக்கு முன்னும் பின்னும் புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தலிபான் ஊடகத் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் ( Suhail Shaheen) டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரருக்கு பிரத்யேகமாகப் பேசிய அவர், தலிபான் ஒரு சுதந்திர விடுதலைப் படை என்று கூறினார். விடுதலை புலிகளுடன் (LTTE) எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் ஒரு சுயாதீன விடுதலைப் படை, கடந்த 20 ஆண்டுகளாக நமது நாடு, ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடினோம், ”என்று ஷாஹீன் கூறினார்.

Suhail Shaheen

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி நேற்று தலைநகர் காபூலின் நுழைவாயிலில் இருந்த போதும் ஷாஹீன் டோஹாவில் இருந்து டெய்லி மிரருடன் சுருக்கமாக பேசினார். ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் அமைதியான அதிகார பரிமாற்றத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் பாமியன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான புத்தர் சிலை, தலிபான்களால் மார்ச், 2001 இல் அழிக்கப்பட்டது. பழங்கால மணற்கல் சிற்பங்களை அழித்ததை கண்டித்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.. தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது பௌத்த தளங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற அச்சம் இப்போது உள்ளது.

இருப்பினும், தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்கள் ஆபத்தில் இருக்காது என்று ஷாஹீன் தெரிவித்தார். “ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்கள் ஆபத்தில் இல்லை, இது தொடர்பான எந்தவொரு கருத்தையும் நான் மறுக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

தலிபான்களை பயங்கரவாதிகளாக இலங்கை கருதக்கூடாது என்றும் அவர் கூறினார். உங்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய உங்கள் முன்னோர்களைப் போல் நாங்கள் ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராளிகள். ஆனால் நாங்கள் விஷம பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ”என்று ஷாஹீன் கூறினார்.

அமெரிக்கப் படைகள் வெளியேறியதை் தொடர்ந்து ஒரு வாரத்தில் தலிபான்கள் கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றினர்.

– Nirujan Selvanayagam

Leave A Reply

Your email address will not be published.