நாடு முடங்குமா! – சுகாதார அமைச்சே இறுதி முடிவு எடுக்கவேண்டும் என்கிறார் டலஸ்.

என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டை முடக்காதிருப்பதற்குத் தாக்கம் செலுத்தும் சில காரணிகள் தொடர்பில் அமைச்சரவையை ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

உலகில் இந்தக் கொரோனா பரவல் குறித்து மூன்று வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய, முழுமையாக நாட்டை முடக்குவது முதலாவது நடவடிக்கையாகும்.

இரண்டாது தடுப்பூசியை 40, 50 சதவீதமளவில் செலுத்தியதன் பின்னர், நாட்டை முழுமையாகத் திறப்பது இரண்டாவது நடைமுறையாகும்.

மூன்றாவது நடைமுறையானது, ஓரளவான தரப்பினக்குத் தடுப்பூசியைச் செலுத்தி, நாட்டைப் பகுதியளவில் திறக்கும் நிலை உலகளவில் உள்ளது.

இதற்கமைய, சுகாதாரத்துறையும், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு செயலணியும் நாட்டை இந்த மூன்றாவது நிலையில் வைத்திருக்கத் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு இறுதித் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.