சேவைகள் இடைநிறுத்தம் மற்றும் மீள் சேவைகள் நடைமுறை தொடர்பான அறிவித்தல்.

நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள கொவிட்-19(Covid-19) தொற்று காரணமாக, யாழ்ப்பாணம் மோட்டார் வாகன போக்குவரத்துத்திணைக்களத்தின் 2021.08.19 மற்றும் 2021.08.20 ஆகிய திகதிகளிற்கான கடமைகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

1.மேலும் இத்திகதிகளில் நடைபெறவிருந்த மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப் பரீட்சைகள் யாவும் கீழ் குறிப்பிடப்படும் திகதிகளில் அறிவிக்கப்படுகின்ற நேரத்திற்கு நடைபெறும்.
2021.08.19 வியாழக்கிழமை பரீட்சைகள் 2021.08.21 ம் திகதி சனிக்கிழமையும் 2021.08..20 வெள்ளிக்கிழமை பரீட்சைகள் 2021.08.23 ம் திகதி திங்கட்கிழமையும் நடைபெறும்.

2. 2021.08.19 வியாழக்கிழமை நடைபெறவிருந்த மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர செயன்முறைப்பரீட்சைகள் யாவும் 2021.08.23ம் திகதி திங்கட்கிழமை நடைபெறும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

3. அத்துடன் மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான ஏனைய நடவடிக்கைகள் 2021.08.23 – 2021.08.27 வரைவழங்கப்பட்ட, வழங்கப்படவுள்ள நுழைவுச்சீட்டிற்கு அமைவாக நாளாந்தம் 50 நுழைவுச்சீட்டுக்கள் என்ற அடிப்படையில் நடைபெறும்.

4. மோட்டார் வாகன உடமைமாற்றம் தொடர்பான கடமைகள் யாவும் உரியவர்கள் முற்பதிவுசெய்த ஒழுங்கில் தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டமைக்கமைவாக நடைபெறும்.

5. சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான முடிவுத்திகதி தொடர்பாக, 2221/57ஆம் இலக்க 2021.04.01ம் திகதிய இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அதிவிசேஷ வர்த்தமானப் பத்திரியின் பிரகாரம் 2021 ஏப்பிரல் 1ம் திகதி முதல் செப்ரெம்பர் 30 வரையில் காலம் முடிவடைகின்ற அனுமதிப்பத்திரங்களிற்கு காலாவதித் திகதியில் இருந்து 06 மாதங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறியத்தரப்பட்டுள்ளது. இதற்கமைவாக எம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Leave A Reply

Your email address will not be published.