நாட்டை முடக்க வேண்டுமாயின் அரச ஊழியர்கள் மாதாந்த சம்பளத்தில் சரிபாதியை அரசாங்கத்திற்கு அன்பளிப்பு செய்ய வேண்டும் – தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சர் தகவல்

இலங்கையை முழுமையாக இரண்டு வாரங்கள் முடக்க வேண்டுமாயின் அரச ஊழியர்கள் தங்களது மாதாந்த சம்பளத்தில் சரிபாதியை அரசாங்கத்திற்கு அன்பளிப்பு செய்ய வேண்டும் என தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

நாட்டை முடக்குமாறு முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

“ஒவ்வொரு தரப்பினரும் நாட்டை மூடுமாறு யோசனை முன்வைக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரச ஊழியர்களும் மாத சம்பளத்தில் சரிபாதியை விட்டுக் கொடுத்தால் நாட்டை தாராளமாக முடக்க முடியும்.

அவ்வாறான வழியில் பயணித்து இணக்கம் ஏற்பட்டால் நாட்டை மூடலாம். இந்த நாட்டில் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல 80 லட்சம் பேர் உழைக்கின்றனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க குறித்த பணத்தை பயன்படுத்த முடியும் என்றார்.

கேகாலை தம்மிக்க பாணியை விளம்பரப்படுத்துவதில் சிசிர ஜயகொடி முன்னின்று செயற்பட்டவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.