2 வாரங்களுக்குத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படாது! மரண வீதத்திலும் அதே நிலைமை. உபுல் ரோஹண.

“நாடு தற்போது முடக்கப்பட்டிருந்தாலும் இன்னும் 14 நாட்களுக்குக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண எண்ணிக்கையில் குறைவு இருக்காது.”

இவ்வாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடு 10 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதால் அடுத்த இரு வாரங்களின் பின்னரே கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையக்கூடும்.

அதுவரைக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண எண்ணிக்கையில் குறைவு இருக்காது. இரு வாரங்களுக்குப் பின்னரே இந்த எண்ணிக்கைகளில் குறைவு ஏற்படக்கூடும். அதனைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் மக்கள் செயற்பட வேண்டும்.

பொது முடக்கம் நீக்கப்பட்ட பின்னரும் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.