சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம்.

வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டதாக பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் யாழ்ப்பாணம் அஞ்சலாதேவி சிறீரங்கன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் வரும் கால போகத்தில் கிட்டத்தட்ட 12 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வுள்ளது இந்த நெற்செய்கைக்கு தேவையான சேதனப் பசளை யினை விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்ய வேண்டிய கடப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய விவசாய அமைச்சின ஆலோசனை மற்றும் விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய விவசாயிகள் சேதனப் பசளை உற்பத்தி செய்வதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக இன்றைய தினம் ஒரு வாகன பேரணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகன பேரணியானது நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் உள்ள விவசாயிகள் மற்றும் சண்டிலிப்பாய் உடுவில் சங்கானை விவசாய போதனாசிரியர் பிரிவின் ஊடாக செல்லவுள்ளது.

இந்த வாகன பேரணி ஊடாக விவசாயிகளுக்கு சேதன பசளை உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த வாகன பேரணியானது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன்போது விவசாயிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் மூலம் சேதன பசளை தொடர்பில் விளக்கமளிக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.