5 வயதுக்குப் பிறகு குழந்தையின் கைரேகை உள்ளிட்ட பையோ மெட்ரிக் முறையில் பதிவு செய்தால் மட்டுமே ஆதார் அட்டை செல்லுபடியாகும்

இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது இன்றியமையாததாகிவிட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டைதான் கட்டாயமாகியும் விட்டது.

தற்போதெல்லாம் குழந்தை பிறந்ததுமே, பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கிறார்களோ இல்லையோ பால் ஆதார் எனப்படும் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

மருத்துவமனையில் குழந்தை பிறந்ததற்காகக் கொடுக்கப்படும் சான்றிதழ் மட்டுமே போதும் இதற்கு. அல்லது பெற்றோரின் ஆதார் அட்டையும் போதும். அப்படியெல்லாம் சிரமப்பட்டு ஆதார் அட்டை வாங்கி வைத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், அவ்வாறு குழந்தைக்கு பால் ஆதார் அட்டை வாங்கிய பெற்றோர், குழந்தைக்கு 5 வயதானதும், ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று குழந்தைகளின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழியை பதிவு செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அவ்வாறு செய்யாமல் மறந்துவிட்டால், பால் ஆதார் அட்டை செல்லாததாகிவிடும்.

ஆதார் அமைப்பு இது குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதில், பால் ஆதார் அட்டை குழந்தையின் 5 வயது வரையில்தான் செல்லுபடியாகும். 5 வயதுக்குப் பிறகு குழந்தையின் கைரேகை உள்ளிட்டவை பையோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டால், அது செல்லாததாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.