பிரதேச மக்களுக்கு இடர்கால உலர் உணவுப்பொதி விநியோகம்.

கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு கொவிட்-19 இடர்காலத்தைச் சமாளிப்பதற்கு உதவும் வகையிலான உலர் உணவுப்பொதிகள் கடற்றொழில் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

கௌதாரிமுனையைச் சேர்ந்த 137 குடும்பங்களுக்கும் தலா 3,000 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் இன்றைய தினம் வழங்கப்பட்டன.

கௌதாரிமுனை விநாயகர் கடற்றொழிலாளர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக, அவர்களுக்கான கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு உதவுவதற்கு முன்வந்துள்ள சுகத் இன்டர்நஷனல் நிறுவனத்தினர் சார்பாக இந்த உதவிப்பொருள்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சுகத் இன்டர்நஷனல் நிறுவனத்தின் தலைமை உத்தியோகத்தர்களில் ஒருவரான சுபாஷ் தலைமையில் உதவிப்பொருள்கள் எடுத்துவரப்பட்டு, பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன், கௌதாரிமுனை பரமங்கிராய் கிராமசேவையாளர் ராஜகோபால் ஆகியோரின் பங்கேற்புடன் உதவிப்பொருள்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கௌதாரிமுனை, விநாசியோடை மற்றும் மண்ணித்தலை பகுதிகளில் தனித்தனியாக கொவிட் தொற்று சுகாதார வழிமுறைகளின்படி இந்த உதவிப்பொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.