இன்றையபஞ்சாங்கம் 30.08.2021 இன்றைய ராசிபலன்.

சூரிய உதயம் : 06:01
சூரிய அஸ்தமனம் : 18:18
சந்திர உதயாதி நாழிகை : 23:54
சந்திர அஸ்தமனம் : 12:16
ஷகா சம்வத் : 1943 பிலவ
Lunar Month : ஆவணி 14
பட்சம் : கிருஷ்ண பக்ஷம்
திதி : அஷ்டமி – 25:59 வரை
நட்சத்திரத்தன்று : கார்த்திகை – 06:39 வரை
யோகம் : வியாகதம் – 07:47 வரை
முதல் கர்ணன் : பாலவம் – 12:42 வரை
இரண்டாவது கர்ணன் : கௌலவம் – 25:59 வரை
சூரிய அடையாளம் : சிம்மம்
சந்திரன் அடையாளம் : ரிஷபம்
அபிஜித் : 11:45 – 12:34
துர்முஹுர்த்தம் : 12:34 – 13:23
15:01 – 15:50
Varjyam : 24:42 – 26:31
ராகுகாலம் : 07:33 – 09:05
குளிகை : 13:41 – 15:14
யமகண்டம் : 10:37 – 12:09
சந்திராஷ்டமம்
விசாகம்

💐மேஷம்
மேஷம்: குடும்பத்தில் நல்ல குதூகலமான சூழல் உருவாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உற்சாகமாகச் செயல்படும் நாள்.
💐ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். யாரையும் எளிதில் நம்பி விடக் கூடாது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிடவேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
💐மிதுனம்
மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வாகனம் தொந்தரவு தரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரும். உத்தியோகத்
தில் மேலதிகாரி விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
💐கடகம்
கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மதிப்புக் கூடும் நாள்.
💐சிம்மம்
சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள்.
💐கன்னி
கன்னி: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகிய அமைதி அதிகரிக்கும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.
💐துலாம்
துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் அனைவரிடமும் அளவாக பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
💐விருச்சிகம்
விருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
💐தனுசு
தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
💐மகரம்
மகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறை வேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் புதுவேளையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.
💐கும்பம்
கும்பம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பணப்பற்ற குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
💐மீனம்
மீனம்: சவால்களில் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தைரியம் கூடும் நாள்.

Leave A Reply

Your email address will not be published.