இலங்கை தமிழ் அகதிகள் நலனுக்காக ஸ்டாலின் வெளியிட்ட சிறப்பு அறிவிப்பை கேட்ட மக்களது மன நிலை….(Video)

இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். அவர்களது குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். விலையில்லா எரிவாயு அடுப்பும் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

முதல்வரது அறிவிப்பை கேட்ட அநேகர் , அவருக்கு தொடர்ந்து தமது நன்றிகளை சமூக வலைத்தளங்களிலும் , நேரடியாகவும்  தெரிவித்து வருகிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்தார், அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறும் போது, இலங்கை தமிழர்களுக்கு இவ்வாண்டில் 108 கோடி மதிப்பில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களின் அகதிகள் முகாமில் வீடுகள், சாலைகள் சீரமைக்கப்படும் என்றார்.

மேலதிக விபரங்கள் ….

குழந்தைகள் கல்வி
இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகளும் 231 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். அவர்களது குழந்தைகள் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். விலையில்லா எரிவாயு அடுப்பும் இணைப்பு வழங்கப்படும்

கல்வி செலவு
இலங்கைத் தமிழர் குடும்பங்களை சேர்ந்த பொறியியல் படிக்க தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 பேரின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களைத் தமிழக அரசே ஏற்கும். முதுநிலை படிக்கும் மாணவர்களின் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்கும். தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை அகதி மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

ஸ்டாலின் உறுதி
இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூ2,500லிருந்து ரூ10,000 ஆகவும், கலை & அறிவியல் மாணவர்களுக்கு ரூ3000ல் இருந்து ரூ12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ5000ல் இருந்து ரூ20,000 ஆக உதவித்தொகை உயர்த்தப்படும் என்று முதல்வர் கூறினார். இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல, கடல் கடந்து வாழும் தமிழர்களை காக்கும் அரசாக இருக்கும் திமுக அரசு இருக்கும் என்றும் அவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.

கட்டமைப்பு
இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கான முழுச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று கூறிய முதல்வர், இலங்கை அகதிகளின் முகாம்களில் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இலங்கை அகதிகள் முகாம்களின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு இனி ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சட்டசபையில் கூறினார்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை
இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

அவரது அறிவிப்பின் பின் இந்தியாவுக்கு புலம் பெயர்ந்துள்ள பலர் தங்களது நன்றிகளை இப்படி தெரிவித்து வருகிறார்கள்.

மக்கள் தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்திய வீடியோ:-

 

  • Mahadevan Bangalore

Leave A Reply

Your email address will not be published.