சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளை தவிர்த்து பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கல்வி அமைச்சு அவதானம் செலுத்தி வருவதாக அறியமுடிகிறது.
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சுக்கும், பரீட்சைகள் திணைக்களத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்று வருவதாக கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கலந்துரையாடலில், க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய 622,000 மாணவர்களில், 170,000இற்கும் குறைவான மாணவர்களே, சங்கீதம், நடனம் மற்றும் சித்திரம் போன்ற செயன்முறைப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ளனர்.

எனவே, செயன்முறைப் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கவுள்ள மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு, ஏனைய மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்துவதும் செயற்பாடானது, அடுத்துவரும் பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் சிக்கல் நிலைமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகின்றமையினால், உயர்தர கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்படுவதை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண சாதாரண தர பரீட்சை பரீட்சைகள் நிறைவு பெற்று, 6 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் செயன்முறைப் பரீட்சைகள் நடைபெறாததால் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.