70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாட்டில் வைத்தியசாலையில் நிலவும் இரத்தரப் பற்றாக்கு குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கண்டி மாவட்டத்தில் கண்டி தேர்தல் தொகுதியில் விசேட இரத்ததான நிகழ்வு கண்டி சுதுஹம்பொல வீதியில் அமைந்துள்ள ஐ. எம். எஸ். கல்வி நிலையத்தில் கண்டி ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர் சிசிர விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் முன்னாள் முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக கலந்து கொண்டு இரத்ததான நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதில் சப்ரகமுவ முன்னாள் ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சிவபாலன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரகமுகர்கள் கலந்து கொண்டனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

சுகாதார வழிமுறைக்கு இணங்க சுமார் 100 பேர் அளவில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

(இக்பால் அலி)

Leave A Reply

Your email address will not be published.