ஜி 20 சர்வமத மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச போலோன்ஞோ வந்திறங்கினார்

G20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு புறப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) பிற்பகல் போலோன்ஞோவில் உள்ள குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பிரதமரையும் அவரது குழுவினரையும் இத்தாலிய அரசு அதிகாரிகள் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கை தூதரகம் அன்போடு வரவேற்றது.

ஜி 20 சர்வமத மன்றம் இத்தாலி 2021 (ஜி 20 சர்வமத மன்றம் இத்தாலி) நாளை (12) போலோன்ஞோவில் தொடங்க உள்ளது.

தொடக்க விழாவில் சிறப்புரை ஆற்றுவதற்கு மாண்புமிகு பிரதமர் அழைக்கப்படுகிறார்.

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் “கலாச்சாரங்களுக்கிடையே அமைதி மற்றும் மதங்களுக்கிடையேயான புரிதல்”.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜி 20 சர்வமத மாநாட்டையொட்டிய தனது வருகையின் போது பல இராஜதந்திர கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார்.

இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி (Mario Draghi), ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் டேவிட் சசோலி (David Sassoli ) மற்றும் ஸ்லோவேனிய ஜனாதிபதி பொரட் பாஹோர் (Borut Pahor) ஆகிய சில இராஜதந்திரிகளையும் பிரதமர் சந்திக்க உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.