இலங்கையில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை! – நிதி இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.

“கொரோனாத் தொற்றுப் பரவலால் நாடு முடக்கப்பட்டுள்ள நிலையிலும் இங்கு உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.”

இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. விவேகமான கொள்கைகள் மூலம் அவற்றை எதிர்கொள்ள முடியும்.

இந்த வருடம் இலங்கையின் பொருளாதாரம் 4.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும்” – என்றார்.

இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு இல்லை என்றால் ஏன் உணவு விநியோக அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என குறித்த சர்வதேச ஊடகத்தின் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியபோது,

“நாட்டில் சில மோசமான வர்த்தகர்கள் செயற்கையாக உணவுத் தட்டுப்பாட்டை உருவாக்கி, இலாபம் ஈட்டப் பார்க்கின்றனர். அதனைத் தடுப்பதற்காகவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது” என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.