இலங்கை சமுத்திர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அரபிக்கடலில் தத்தளிக்கும் அவலநிலை

கொவிட் – 19 அச்சுறுத்தலால் உலகமே சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில் 60க்கும் மேற்பட்ட இலங்கை சமுத்திர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அரபிக்கடலில் படகு ஒன்றில் சிக்கியுள்ளனர்.

‘‘Grey Palm’’ என்ற ஸ்பெய்ன் குழுமத்திற்கு சொந்தமான மத்திய தர மீனவர் படகு ஒன்றில் சிக்கியுள்ள இவர்கள் 40 – 50 பேருக்கு சேவை வழங்கக்கூடிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் தம்மை இலங்கைக்கு அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் படகில் 180 பேரை தடுத்து வைத்து ஆட்கடத்தல் இடம்பெறுவதாகக் கடந்த 2 ஆம் திகதி பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதுடன்> இப்படகில் சிக்கியுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களில் அதிகமானவர்கள் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களாவர்.

சர்வதேச கப்பல் ஒன்றியத்தின் நியமங்களுக்கமைய தடுத்து வைக்கும் போது வழங்கப்படும் எவ்வித அடிப்படை வசதிகளும் தமக்கு வழங்கப்படவில்லை என்பதனை இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments are closed.