அநுராதபுரம் சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ஸ

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவத்தை அடுத்து  , அவசர அவசரமாக  நாமல் ராஜபக்ஸ  அநுராதபுரம் சிறைச்சாலைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தமை தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, தனது டுவிட்டர் தளத்தில் , கைதிகள் தன்னை சந்திக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்த நிலையிலேயே தான் அவர்களை சந்தித்து, அவர்களின் துன்பங்களை பகிர்ந்துக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.