ஐபிஎல் 14ஆவது சீசன் எஞ்சிய லீக் போட்டிகளின் முழு அட்டவணை.

ஐபிஎல் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதிமுதல் துவங்கிச் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால், எஞ்சிய 31 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில், ஐபிஎல் தொடரைச் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15ஆம் தேதிவரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து எஞ்சிய 31 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்படி, இன்று 19ஆம் தேதி துவங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி கள மோதவுள்ளன. இப்போட்டி துபாயில் நடைபெறும். சிஎஸ்கே அடுத்த லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை ஷார்ஜா மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த மைதானம் சிறியது என்பதால் அதிரடிக்கு பஞ்சமிருக்காது. (முழு அட்டவணையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

போட்டிகள் எங்கு, எப்போது?

போட்டிகள் இரவு 7:30 மணிக்குத் துவங்கி நடைபெறும். மாலை நேர போட்டிகள் 3:30 மணிக்குத் துவங்கி நடைபெறும். போட்டிகள் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மைதானங்களில் நடைபெறும்.

பிளே ஆஃப் சுற்று எப்போது?

லீக் போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிடும். அதனைத் தொடர்ந்து அக்டோபர் 10ஆம் தேதி முதல் பிளே ஆஃப் சுற்றும், அக்டோபர் 11ஆம் தேதி எலிமினேஷன் சுற்றும் நடைபெறும். அக்டோபர் 13ஆம் தேதி இரண்டாவது பிளே ஆஃப் சுற்று நடைபெறும். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 15ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில்:

இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில், டெல்லி கேபிடல்ஸ் அணி முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றன. அடுத்தடுத்த இடங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருக்கின்றன.

ஐபிஎல் அட்டவணை: (இலங்கை மற்றும் இந்திய நேரப்படி)

Match Noபோட்டிகள்தேதிநேரம்இடம்30CSK vs MI19 செப்டம்பர், 20217:30PMதுபாய்31KKR vs RCB20 செப்டம்பர், 20217:30PMஅபுதாபி32Punjab Kings vs RR21 செப்டம்பர், 20217:30PMதுபாய்33DC vs SRH22 செப்டம்பர், 20217:30PMதுபாய்34MI vs KKR23 செப்டம்பர், 20217:30PMஅபுதாபி35RCB vs CSK24 செப்டம்பர், 20217:30PMஷார்ஜா36DC vs RR25 செப்டம்பர், 20213:30PMஅபுதாபி37SRH vs Punjab Kings25 செப்டம்பர், 20217:30PMஷார்ஜா38CSK vs KKR26 செப்டம்பர், 20213:30PMஅபுதாபி39RCB vs MI26 செப்டம்பர், 20217:30PMதுபாய்40SRH vs RR27 செப்டம்பர், 20217:30PMதுபாய்41KKR vs DC28 செப்டம்பர், 20213:30PMஷார்ஜா42MI vs Punjab Kings28 செப்டம்பர், 20217:30PMஅபுதாபி

Leave A Reply

Your email address will not be published.