தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் : தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம்.

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் இருபதாயிரம் மையங்களில் நடைபெறுகிறது. ஒரே நாளில் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் முதல் முறையாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது அந்த முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ் செலுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து ஞாயிறு தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 50 லட்சம் டோஸ் ஒரு வாரத்துக்கு தமிழகத்துக்கு தேவை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கடிதம் எழுதியிருந்தார். செப்டம்பர் 17ம் தேதி நடைபெறவிருந்த தடுப்பூசி முகாம் போதிய தடுப்பூசி இல்லாததால் 19ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.

முதல் முறை நடைபெற்ற தடுப்பூசி முகாம் 40 ஆயிரம் இடங்களில் 20 லட்சம் டோஸ் இலக்குடன் தொடங்கி 28 லட்சத்துக்கும் மேலான் டோஸ் செலுத்தி முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது 17 லட்சம் டோஸ் மட்டுமே கையிருப்பு உள்ளதால் இன்று 20 ஆயிரம் இடங்களில் 15 லட்சம் டோஸ் செலுத்தும் நோக்குடன் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

 

Leave A Reply

Your email address will not be published.