கனேடிய தேர்தலில் இலங்கை தமிழரான கேரி ஆனந்தசங்கரி அபார வெற்றி

ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி சார்பில் Scarborough-Rouge Park தொகுதியில் போட்டியிட்ட Gary Anandasangaree வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் பதிவான 36,236 வாக்குகளில் கேரி ஆனந்தசங்கரி 22,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது 63.5% என தெரிய வந்துள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் Zia Choudhary வெறும் 20.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் லிபரல் கட்சி கூட்டணி ஆட்சி யொன்றை அமைக்கும் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.