ஆர்சிபியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சிஎஸ்கே.

ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மணல் புயல் வீசியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

விராட் கோலி, தேவ்தத் படிக்கல் தொடக்கத்தில் அபாரமாக விளையாடினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

விராட் கோலி 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி.வில்லியர்ஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 70 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், ஆர்.சி.பி. அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. கெயிக்வாட், டு பிளசிஸ் ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. கெயிக்வாட் 38 ரன்னிலும், டு பிளசிஸ் 31 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து ஆடிய மொயீன் அலி 23 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய அம்பதி ராயுடு 32 ரன்னில் வீழ்ந்தார்.

அடுத்து ரெய்னாவுடன் எம்.எஸ்.டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

இறுதியில், சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரெய்னா 17 ரன்னும், டோனி 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி மீண்டும் முதலிடம் பிடித்தது.

Leave A Reply

Your email address will not be published.