மன்னாரில் கடற்படையினரின் அராஜகம்! சம்பவ இடத்திற்கு சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம்!

மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வங்காலைபாடு என்னும் கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று வந்த கிராமத்தவர் ஒருவரை நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த கடற்படையினர் வழிமறித்து எவ்விதக் காரணமும் இல்லாமல் வெறித்தனமாக தாக்கியுள்ளனர்.

அதை நேரில் பார்த்த கிராம சேவகர் ஒருவர் அவரை ஏன் தாக்குகின்றீர்கள் என கடற்படையினரை கேட்கசென்றபோது பத்துக்கும் மேற்பட்ட கடற்படையினர் சேர்ந்து அக் கிராமசேவகரையும் தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பாக பேசாலை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது முறைப்பாட்டை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். உடனடியாக அவர்களின் உடல்நலம் கருதி பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் இவ் அராஜகமானது தற்போது இருக்கும் அரசாங்கத்தின் உண்மையான மனநிலையை வெளிக்காட்டியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவமானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத் தாக்குதல் சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

Leave A Reply

Your email address will not be published.