மரக்குற்றிகள் கீழே விழுந்து குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

கிரேனின் உதவியுடன் மரக் குற்றிகளை இறக்கும்போது அதன் கேபிள்கள் அறுந்து மரக்குற்றிகள் கீழே வீழ்ந்ததால் மர ஆலை ஒன்றின் ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி – கட்டுகஸ்தோட்டையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அக்குரணை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கிரேன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.