ஒக். 1 இல் ஊரடங்கை நீக்குவது பற்றி இறுதித் தீர்மானம் இதுவரை இல்லை! இராணுவத் தளபதி.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நீக்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தனிமைப்படுத்தல் முடக்கத்தை நீக்கி நாட்டைத் திறப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை. எனினும், இது குறித்த இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதியே அறிவிப்பார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

திட்டமிட்டபடி ஒக்டோபர் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுமாயின் அதன் பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவையை பராமரித்துச் செல்லும் முறையைத் தயாரிப்பதற்காகக் கொரோனாத் செயலணியினால் குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.