நாளை நாடு திறக்கப்படுகிறது : அத்தியாவசியமற்ற எந்த செயற்பாடுகளுக்கும் அனுமதி இல்லை.(Update)

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 04 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய,,

அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்

அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்காக தினமும் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 04 மணி வரை அனுமதி வழங்கப்பட மாட்டாது

பொது போக்குவரத்து சேவைகளின் போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்ற முடியும்

பொது போக்குவரத்தின் போது வாகனங்களின் குளிரூட்டியை பயன்படுத்தாமல் வாகனங்களின் ஜன்னல்களை திறக்க வேண்டும்

அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை அணிந்திருந்தல் வேண்டும்

வைபவங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் விதத்திலான நிகழ்வுகளுக்கு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை அனுமதியில்லை

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் உள்ளே ஐவர் மாத்திரமே இருக்க முடியுமென்பதுடன் ஏனைய வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு வௌியே 01 மீட்ட இடைவௌியை பேணி வரிசையில் நிற்க வேண்டும்

விவசாயத்துறைக்கு அனுமதி

சிகையலங்கார நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தமக்கான நேரத்தை முற்கூட்டியே ஒதுக்கிக் கொள்ள வேண்டும்

கல்வியமைச்சின் தீர்மானத்தின்படி, 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறப்பதற்கு முதலில் சந்தர்ப்பம் வழங்கப்படும்

பாலர் பாடசாலைகளில் 50 வீதமான மாணவர்களை ஒரு தடவையில் இணைத்துக் கொள்ள முடியும்

சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க முடியும்

திரையரங்குகளை திறக்க அனுமதியில்லை

உடற்பயிற்சி நிலையங்களில் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒரு தடவையில் ஐவருக்கு அனுமதி

திருமண பதிவிற்காக ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 50 பேருக்கும் அனுமதி

மரணச் சடங்குகளில் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 15 பேருக்கும் அனுமதி

மதவழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூட அனுமதியில்லை

பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி இல்லை

Leave A Reply

Your email address will not be published.