மூன்று வழிகளில் ஐ.தே.கவுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஆரம்பம்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதற்கான திகதியை வழங்கியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 20ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிக முக்கியமான நாள் என்பதால் கட்சித் தலைவர் குறித்த நாளைத் தெரிவு செய்துள்ளார் என்று கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒக்டோபர் 20ஆம் திகதி கட்சியின் நிறுவுநர் ஜெனரல் டி. எஸ். சேனாநாயக்கவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்க மூன்று பிரிவுகளின் கீழ் கட்சி உறுப்பினர்களை நியமிக்க முன்மொழிந்துள்ளார்.

அவற்றில் முதலாவது ஆயிரம் உறுப்பினர்கள் அட்டை முறைமை, இரண்டாவது டிஜிட்டல் உறுப்பினர் அமைப்பு அல்லது ஒன்லைன் உறுப்பினர் முறைமை, மூன்றாவதாக வழக்கமான முறையில் கிராம அளவில் உறுப்பினர்களைச் சேர்ப்பது.

இந்நிலையில், நாடு முழுவது அனைத்துக் கிராமங்களையும் உள்ளடக்கும் வகையில் கட்சி உறுப்பினர்களை நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதுள்ள அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் பதிவுகளையும் புதுப்பிக்க கட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.