மஹிந்த ஒரு கல்லூரி அதிபர் ! : விஜயசிறி கம்லத் (நாட்டு நடப்பு)

இலங்கையின் பிரபல நடிகையான கீதா குமாரசிங்க, மகிந்தவின் அழைப்பின் பேரில் கலை உலகிலிருந்து  அரசியலில் நுழைந்தார்.

2005 இல் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த முதன்முதலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரங்கில் நுழைந்தபோது, ​​மகிந்தவின் பால் மக்களை ஈர்க்க  ஒரு பிரபலமான கலைஞர் கூட இருக்கவில்லை.

மகிந்தவின் கொள்கை அறிக்கை கொழும்பில் உள்ள BMICH இல் வெளியிடப்பட இருந்தது. அமைப்பாளர்கள் பல புகழ்பெற்ற கலைஞர்களை அழைத்திருந்தார்கள், ஆனால் அழைப்பாளர்கள் கொள்கை அறிக்கையை பெற ஒரு கலைஞராவது வருவார்கள் என கனவில் கூட நினைத்திருக்கவில்லை.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ஆனால் விழா தொடங்கவிருந்த நிலையில், கீதா குமாரசிங்க BMICH முன் படிகளில் ஏறி, அனைவரின் கண்களும் நம்ப முடியாதபடி  மண்டபத்திற்குள் நுழைந்து நடந்து வந்து கொண்டிருந்தார். மகிந்த தனது ஜனாதிபதி பிரச்சாரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த போது கீதாவும் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

பத்து வருடங்கள் கழித்து, 2015 இல், மஹிந்த தோற்கடிக்கப்பட்டு, மெதமூலன  வீட்டுக்கு சென்றபோது, ​​10 வருடங்களாக மகிந்தவுடன் நட்பில் இருந்த ஏராளமான எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் மகிந்தவின் கழுவி ஊற்றி புறம் பேசத் தொடங்கியிருந்தனர். ஆனால் கீதா மட்டும் 2005 , கடுமையான நேரமான , அவர் தோற்கடிக்கப்பட்டு வீட்டிற்கு சென்ற பிறகும் கூட மகிந்தவின் ஆதரவாளராக இருந்தார்.

மகிந்த ராஜபக்ச அமைத்த ‘மஹிந்தோதயா’ ஆய்வகங்களின் பெயரை மாற்ற மைத்திரி தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து  முன்மொழிவைக் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்திற்கு எதிராக யாரும் வாயே திறக்கவில்லை என்றாலும், கீதா தயங்காமல் மேடை ஏறி  நல்லாட்சி அரசை பகிரங்கமாக விமர்சித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால, கீதாவை , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டாலும் ,  கீதாவை மகிந்தவிடமிருந்து பிரிக்க  முடியவில்லை. இறுதியில், மைத்திரி கீதாவுக்கு காலி அபிவிருத்தி குழுவின் தலைவர் பதவியை வழங்குவதாகக் கூட  ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார், ஆனால் கீதா மைத்ரிக்கு பணியவில்லை. கீதா , மைத்ரியை சட்டையே செய்யவில்லை.
இறுதியாக , நல்லாட்சி அரசாங்கம் இரட்டை குடியுரிமையை முன்வைத்து கீதாவின் பாராளுமன்ற ஆசனத்தை ரத்து செய்தது. அவர் நல்லாட்சி அரசாங்கத்துடன் சென்றிருந்தால் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க முடியும் என்றாலும், கீதா, மஹிந்தவுடனான அவரது நட்புக்காக  கீழ் பணியவில்லை.  பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் வீட்டிற்கு சென்றாலும் கீதா மகிந்தவுடன் கூடிய நட்பு காரணமாக மகிழ்வாக இருந்தார்.

அப்படி தியாகம் செய்து மகிந்தவுடன் இருந்த போதிலும், கீதாவுக்கு இன்றைய அரசாங்கத்தில் துணை அமைச்சரோகவோ அல்லது இராஜாங்க அமைச்சரோகவோ எந்தவொரு பதவியும் இல்லை. ஆனால் கீதா இன்னும் மகிந்தவுடன் இருக்கிறார்.

கீதா சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இதைப் பற்றி ஒரு அற்புதமான கதையைச் சொன்னார்.

நான் மகிந்தவை நேசிக்கிறேன். இது அன்பு மற்றும் வெறுப்பு உறவு (லவ் அண்ட் கேட் ).

அதைத்தான் கீதா சொன்னாள்.

மகிந்தவைப் பற்றி இப்படிச் சொன்ன முதல் நபர் கீதா அல்ல. கீதாவைப் போலவே, இந்த அரசாங்கத்திற்குள் பிரச்சினைகள் உள்ள பல எம்.பி.க்கள் மஹிந்த மீதான அன்பின் காரணமாக அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மஹிந்தவுடன் தனிப்பட்ட பந்தம் உள்ளது. அந்த தனிப்பட்ட பிணைப்பின் காரணமாக நாங்கள் மகிந்தவை நேசிக்கிறோம் என்று பலர் கூறுகின்றனர்.

இப்படி நேசிக்கப்படக்கூடிய மூன்று அரசியல்வாதிகள் மட்டுமே இலங்கை அரசியலில் இருந்தனர். ஒருவர் டட்லி சேனாநாயக்க. மற்றவர் திருமதி சிறிமாவோ. மூன்றாவது மஹிந்த.

பல எம்.பி.க்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தங்கள் கட்சி தலைவர்களுக்கு மரியாதை காட்டுகிறார்கள். ஆனால் அந்த பாரம்பரிய கௌரவத்திற்கு அப்பாற்பட்ட அரசாங்க எம்.பி.க்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மீது மகிந்தவுக்கு அன்பு உள்ளது. அதனால்தான் அரசாங்கத்திற்குள் ஏமாற்றங்கள் இருந்தபோதிலும், இந்த அமைச்சர்களும் எம்.பி.க்களும் மகிந்தவை விட்டு வெளியேறவில்லை.

மகிந்தவுக்கும் இது தெரியாததல்ல. ஏனெனில் மஹிந்த இந்த அரசாங்கத்தை அமைக்க எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை யாரும் மறக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அலரி மாளிகையை விட்டு மெதமுலான சென்ற மஹிந்த அந்த வீட்டின் வாயில்களை மூடியிருந்தால், இன்று இத்தகைய ஒரு அரசாங்கம் உருவாகியிருக்காது. ஆனால் மஹிந்த மெதமுலானாவின் தொங்கியவாறு நான் தோற்கவில்லை என்று கூறி மீண்டும் அரசியல் நகர்வுகளை தொடங்கினார். அவர் நாடு முழுவதும் உள்ள  பௌத்த விகாரைகளுக்கு சென்று தனக்கான படைகளை ஏற்பாடு செய்தார்.

அத்தகைய நகர்வை தொடங்கியபோது, ​​மஹிந்தவை அரசு முடக்க முயற்சி செய்தது. மூன்று மகன்களில் இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சதித்திட்டங்களுக்கு மத்தியில் மஹிந்த அரசு உருவாக்கப்பட்டது. அதனால்தான் மஹிந்த  கஷ்டப்பட்டு உருவாக்கிய அரசாங்கத்தில் எழும் பிரச்சினைகள் தொடர்பாக அவருக்குள் வேதனைகள் உள்ளன.


விமல், வாசு மற்றும் கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்திற்குள் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும் போது, ​​ மஹிந்த உடனடியாக தலையிட்டு மோதலைத் தீர்க்கிறார்.

மறுபுறம், அரசாங்கத்திற்குள் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மகிந்த நன்கு பழகிவிட்டார். தீர்வுகளை வழங்க அவர் நன்கு பரிட்சயமாகிவிட்டார். ஏனெனில் இன்று  இரு தரப்பிலும் உள்ள பலர் மகிந்த ஆட்சிக்குள் இருந்தவர்கள்தான்.

2005 முதல் 2015 வரை, மகிந்த,  முன்னாள் ஐ.தே.க உறுப்பினர்களான கரு ஜயசூரிய ,  ராஜித ஆகியோரை இணைத்துக் கொண்டு ஆட்சி செய்தார். அவர் JHU ​​ஐ பிரதிநிதித்துவப்படுத்திய சம்பிக்கவையும் வைத்துக் கொண்டு ஆட்சி செய்தார். முஸ்லிம் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஹக்கீம், ரிஷாத் ஆகியோரையும் இணைத்துக் கொண்டு ஆட்சி செய்தார். விமல் வீரவன்சவை உள்வாங்கி ஆட்சி செய்தார்.

இவர்கள்  அனைவரையும் சேர்த்துக் கொண்டு ,  மகிந்த ஒரு விசித்திரமான அரசியல் பயணத்தை மேற்கொண்டார். அக்காலத்தில் மகிந்த கட்சியின் தலைவராக இருந்த போதிலும், கட்சியின் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபாலவின் கையில் இருந்தது. முப்பத்திரண்டு பற்களுக்கு இடையே உள்ள நாக்கு போல இந்த இரண்டு பக்கங்களையும் சமநிலையில் வைத்து மகிந்தவால் நாட்டை ஆள முடிந்தது.

எனவே, இன்றும் அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை சமநிலைப்படுத்த மஹிந்த அவசியம். மகிந்த அந்த சமநிலையை கைவிடும் நாளில் அரசாங்கம் சமநிலையற்றதாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இன்றைய அரசு ஒரு கல்லூரி என்று சொன்னால், மஹிந்த அதன் அதிபர்.

– விஜயசிறி கம்லத்
தமிழாக்கம் : ஜீவன்

 

Leave A Reply

Your email address will not be published.