வடகொரியாவின் ராணுவம் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்கப்படும்.

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது.

இந்த பதற்றத்துக்கு மத்தியில் அண்மை காலமாக வடகொரியா தனது ராணுவ திறனை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஒரே மாதத்தில் 4 புதிய ஏவுகணைகளை சோதித்து வடகொரியா அண்டை நாடுகளை அதிரவைத்தது.

இந்த நிலையில் தனது ராணுவபலத்தை உலகுக்கு காட்டும் வகையில் மிகவும் அரிதான ஆயுத கண்காட்சியை வடகொரியா நடத்தியது.

தலைநகர் பியாங்யாங்கில் நடந்த இந்த கண்காட்சியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணைகள் உள்பட பல முக்கியமான ராணுவ தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த கண்காட்சியில் உரையாற்றிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் ‘‘அமெரிக்காவின் விரோதபோக்கு மற்றும் அழுத்தத்தை சமாளிக்க வடகொரியாவின் ராணுவம் யாராலும் வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்கப்படும்’’ என சூளுரைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.