கேரளாவில் கோவிலில் பூஜைகள் செய்வதற்காக தீட்சை பெற்று தயாராக இருக்கும் 22 பெண் அர்ச்சகர்கள்!

கேரளாவில் கோவிலில் பூஜைகள் செய்வதற்காக 22 பெண் அர்ச்சகர்கள் தீட்சை பெற்று தயார் நிலையில் உள்ளனர்.

கோவில்களில் இறைவனுக்கு நடத்தபடும் பூஜைகளை மேற்கொள்வதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை களையும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணி நியமனங்களை கேரளா மேற்கொண்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பணியமர்த்தப்பட்டு வருகின்றர்.

இதேபோ,, தமிழகத்தில் பெண் அர்ச்சகரும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் முதல் பெண் அர்ச்சகராக சுஹாஞ்சனா
செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வர் கோவிலில் அர்ச்சகராக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நியமிக்கப்பட்டார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அந்தவகையில், கேரளாவில் ஆகமவிதிகளை கற்றி தீட்சை பெற்ற 22 பெண்கள் கோவில்களில் பூஜைகளை நடத்த தயாராக உள்ளார். கடந்த வாரம், இந்தப் பெண் அர்ச்சகர்கள் மூவாட்டுப்புழாவுக்கு அருகிலுள்ள பெரமங்கலம் நாகராஜ க்ஷேத்திரத்தில் கே.வி.சுபாஷ் தந்திரியிடம் ‘தீட்சை’பெற்றதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த ஊடகத்துக்கு கே.வி.சுபாஷ் தந்திரி அளித்துள்ள பேட்டியில், “ பூஜைகள் செய்வதில் பாகுபாடுகள் தொடர்பான விதிகள் அகற்றப்பட வேண்டும். பக்தர்களில் பெரும்பாலோர் பெண்கள் தான். அப்படி இருக்கும்போது அவர்கள் ஏன் கோவில்களில் பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

இப்போது நம்மிடம் இருக்கும் பெண் பூசாரிகள் தங்கள் வம்சாவளியின் அடிப்படையில் அவ்விடத்தை அடைந்தவர்கள் நம்பிக்கை உள்ள மற்றும் சடங்குகளை கற்ற எவரும் பூஜைகளை செய்யலாம். பாலினம் அல்லது சாதியின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.

இவரிடம் பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள் ‘பகவதி சேவை’ மற்றும் ‘கணபதி ஹோமம்’ போன்ற பூஜைகளை செய்ய கற்றுகொண்டுள்ளனர். இவர்களில் பிற மதத்தை சார்ந்தவர்களும் அடக்கம். கே.வி. சுபாஷ் தந்திரியிடம் மேலும் 13 பெண் அர்ச்சகர்கள் பயிற்சிபெற்று வருகின்றனர். விரைவில் அவர்களும் தீட்சை பெறவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.