சேதனப் பசளையை பயன்படுத்தி பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பம் : A.H.M.L. அபேரத்ன

பெரும்போகத்திற்கான பயிர்ச்செய்கை இன்று (15) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகின்றது.

இம்முறை 8 இலட்சம் ஹெக்டேரில் நெற்செய்கை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்தது.

சேதனப் பசளையை பயன்படுத்தி நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன தெரிவித்தார்.

சேதனப் பசளை உற்பத்திக்காக 6,52,000 ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு தலா 7500 ரூபா வீதம் கொடுப்பனவிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் 3,75,000 ஹெக்டேருக்கு தலா 7500 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதனிடையே, பெரும்போகத்திற்கு நீரை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவம் தொடர்பிலான பிரிவின் பணிப்பாளர் S. அபேசிறிவர்தன தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.