பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-i தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் உளர்ச்சார்பு பாடத்தின் பரீட்சை எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளதாக, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக உளர்ச்சார்பு பாடத்தின் மீள் பரீட்சை கலவரையரையன்றி பிற்போடப்பட்டிருந்தது.

தற்போது இப் பரீட்சையை நடத்துவதற்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சம்மந்தப்பட்ட பரீட்சாத்திகள் பரீட்சை அனுமதி அட்டைகள் இம்மாதம் 27ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறவில்லையாயின் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் 026-2220092 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.