டி20 உலகக்கோப்பை இன்று தொடக்கம்… முதல் போட்டியில் ஓமன் – பப்புவா நியூ கினியா.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் ஓமன் – பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏழாவது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்தது.

ஆனால், கொரோனா தாக்கம் காணமாக ஓராண்டுக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் இன்று தொடங்கி வருகின்ற நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், சூப்பர் டுவெல் சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன.

இந்த சுற்றில் 8 அணிகள் தலா 4 அணிகள் வீதம் இரு பிரிவுகளில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் டுவெல் சுற்றுக்கு முன்னேறும். இதில், ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஓமன் அணி, தனது சொந்த மைதானத்தில் முதல் போட்டியில் பப்புவா நியூ கினியா அணியை இன்று எதிர்கொள்கிறது.

இரண்டாவது போட்டியில் வங்கதேச அணி, ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. சூப்பர் டுவெல் சுற்று வருகின்ற 23-ம் தேதி தொடங்குகிறது

Leave A Reply

Your email address will not be published.