டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நமீபியாவை வென்ற இலங்கை!

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 4ஆவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை – நமீபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.

அதன்படி களமிறங்கிய நமீபியா அணி தீக்‌ஷனா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 19.3 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 5, குசால் பெரேரா 11, தினேஷ் சண்டிமல் 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ – பனுக்கா ராஜபக்க்ஷ இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெற செய்தது.

இதன்மூலம் 13.3 ஓவர்களிலேயே இலங்கை அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராஜபக்க்ஷ 42 ரன்களுடனும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.