வதந்திகளை நம்பாதீர்; போதியளவு எரிபொருள் கையிருப்பில்! – கம்மன்பில தகவல்

“நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. வதந்திகளை நம்பியே மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.”

– இவ்வாறு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

”வழமை போன்றே இம்முறையும் எரிபொருள் இருப்பு தொடர்பில் சிலர் வதந்தியைப் பரப்பினர். இதனை நம்பி மக்கள், தமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பி கொள்வதற்கு முற்பட்டனர். இதனால்தான் மற்றுமொரு வரிசையும் உருவானது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றரை நாளுக்குத் தேவையான இருப்பே இருக்கும். அதிக கேள்வி ஏற்பட்டதால்தான் தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியது.

நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது. ஜனவரி மாதம் வரை தொடர்ச்சியாக விநியோகிக்கக்கூடிய வகையில் இருப்பு கைவசம் உள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.