சீனியின் கட்டுப்பாட்டு விலை உயர்த்தப்பட வாய்ப்பு.

நாட்டிற்கு சீனியை இறக்குமதி செய்யும் முன்னணி நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் உள்ள சீனியை மொத்த விலையில் விற்பனை செய்ய முடியாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது, ​​சந்தையில் உள்ள சில கடைகளில் சீனி கிலோ ரூ .160 க்கும் விற்கப்படுகிறது. சீனி தட்டுப்பாடு மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், நுகர்வோர் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் நுகர்வோர்கள், கடைகளிலும் சரி, சதொச.விலும் சரி சீனியை பெற்றுக் கொள்ள முடியாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சீனி போதிய வரத்து இல்லாததால் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதுதுடன் சீனி போதியளவு கையிருப்பில் இல்லாத காரணத்தினால் இந்த நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபன (CWE) இன் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.