வெள்ளைப்பூண்டு மோசடி: 6ஆவது சந்தேகநபர் கைது.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றது எனக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதான வர்த்தகர் ஒருவரின் புதல்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சதொச நிறுவனத்துக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட சுமார் 150 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட சுமார் 56 ஆயிரம் கிலோகிராம் வரையிலான இரு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கனை உயர் அதிகாரிகளின் எந்த அனுமதியும் இன்றி மூன்றாவது தரப்பொன்றுக்கு விற்பனை செய்த விவகாரத்தில் ஏற்கனவே ஐவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் ஆறாவது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை, 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.