ஹெரோயினுடன் நால்வர் சிக்கினர்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முவதோர உயன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12, பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிடோ சந்தியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 20 கிராம் 880 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 05 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாளிகாகந்தை பிரதேசத்தை சேர்ந்தவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுல்லவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 05 கிராம் 770 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.