பேரனோடு அண்ணாத்த படம் பார்த்தேன்! நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் தனது பேரனோடு முன்னதாக படம் பார்த்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் நேற்று இதன் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ட்விட்டரில் தனது பேரனோடு அண்ணாத்த படத்தை பார்த்ததாக தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது அனுபவங்களை ஆடியோவாக தனது மகள் அறிமுகம் செய்துள்ள ஹூட் செயலியில் பகிர்ந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.