தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள்.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் தினேஷ் கார்த்திக். 2004ம் ஆண்டிலிருந்தே இந்திய அணிக்காக ஆடிவந்தாலும், தோனி இதே காலக்கட்டத்தில் ஆடியதால் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணியில் அவ்வப்போது எடுக்கப்பட்டாரே தவிர, தொடர்ச்சியாக எடுக்கப்படவில்லை. இடையிடையில் கிடைக்கும் வாய்ப்புகளை அவரும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. 2018 நிதாஹஸ் டிராபி ஃபைனலில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணிக்கு த்ரில் வெற்றியை பெற்று கொடுத்தார்.

அவருக்கு கிரிக்கெட் கெரியரில் இந்திய அணியில் ப்ரோமோஷன் கிடைக்கவில்லை என்றாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தந்தையாக ப்ரோமோஷன் கிடைத்துள்ளது. ஆம்.. இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது.

தனது குழந்தைகளுடனான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் தினேஷ் கார்த்திக். 2 குழந்தைகளுக்கும், கபிர் பல்லிக்கல் கார்த்திக், சியான் பல்லிக்கல் கார்த்திக் என பெயர் சூட்டப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.