அரிசியை 98 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை….

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி இன்று (29) முதல் ஒரு கிலோகிராம் 98 ரூபாவுக்கு சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சுங்கத்தின் சோதனை நடவடிக்கைகளின் பின்னர் இதுவரையில் நாட்டரிசி அடங்கிய 09 கொள்கலன்கள் தமது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனூடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கொழும்பு துறைமுகத்தில் காணப்பட்ட சீனி அடங்கிய 81 கொள்கலன்களும் சதொச நிறுவனத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சீனி தொகையை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ், சதொச கிளைகளூடாக மக்களுக்கு வழங்கவுள்ளதாக ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.