2 நாட்களுக்கு தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தென்மேற்கு வங்கக்கடலில் அதனை ஒட்டியே இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மற்றும் நகரின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என்றார்.

மேலும், சென்னையில் தற்போதைய சூழ்நிலையில் 26 விழுக்காடு மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 21 விழுக்காடு மட்டுமே குறைவாக பதிவாகி உள்ளது. எனவே சென்னையில் மழை குறைவாகவே காணப்படுகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கும்.

4 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் அதிகமான தண்ணீர் தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.